அமைச்சர் பொன்முடி பதவி தப்பிக்குமா? களமிறங்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!
அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று இறுதி விசாரணையை நடத்துகிறது.
அமைச்சர் பொன்முடி
வருமானத்திற்கு அதிகமாக 1.36 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்டோர் மீது 2002 அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
குற்றம்சாட்டப்பட்ட பொன்முடி, அவரது மனைவி உள்ளிட்டோரை விடுவித்து 2023ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சொத்துக் குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் 2023 ஆகஸ்ட் மாதம் தாமாக முன்வந்து மறுஆய்வுக்கு எடுத்தார்.
மறுஆய்வு
கடைசியாக சொத்துக் குவிப்பு மறுஆய்வு வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்த ஜூலை 22 விசாரணைக்கு வந்தது. அப்போதும் விசாரணை நடைபெறவில்லை. இந்நிலையில், பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
அதில், இறுதி வாதங்களை பொன்முடி தரப்பு, லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் வேலூர் நீதிமன்ற நீதிபதி தரப்பு முன்வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.