பொன்முடி வழக்கு; ஆளுநர் மீது நடவடிக்கை - உச்சநீதிமன்றம் காட்டம்!
பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பொன்முடி வழக்கு
திமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருவரும் குற்றவாளிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இருவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து, பொன்முடி அமைச்சர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இழந்தார்.
ஆளுநர் மறுப்பு
தொடர்ந்து, சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கு விசாரணையில் அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
அதன்பின் அவருக்கு அமைச்சர் பதவி பிராமணம் செய்துவைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என் ரவிக்கு கடிதம் எழுதினார். ஆனால், ஆளுநர் தண்டனைதான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குற்றவாளி இல்லை என நிரூபிக்கப்படவில்லையே என பதவி பிராமணம் செய்துவைக்க மறுத்தார்.
உச்சநீதிமன்றம் கண்டனம்
இதனையடுத்து பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்திர சூட், நீதிபதி, ஆளுநர் ரவி என்ன செய்து கொண்டிருக்கிறார்?
அவரிடம் சொல்லுங்கள் நாங்கள் இதை மிகவும் தீவிரமாக பார்க்கிறோம். அரசியல் சாசனத்தை பின்பற்றாவிடில் மாநில அரசு என்ன செய்யும் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் நாளை பதில் அளிக்கமாறும் கெடு விதித்துள்ளார்.