Saturday, May 10, 2025

பொன்முடியை சந்தித்த மு.க.அழகிரி; என்ன நடந்தது - பரபரப்பில் அரசியல் களம்!

DMK Chennai K. Ponmudy
By Sumathi a year ago
Report

 மு.க.அழகிரி பொன்முடி இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்துள்ளார்.

 பொன்முடி விவகாரம்

திமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருவரும் குற்றவாளிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.'

azhagiri-meeting-with-ponmudi

மேலும், இருவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பொன்முடி அமைச்சர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இழந்தார்.

பொன்முடி வழக்கு - நீதித்துறையில் உதவுபவர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும் - வானதி சீனிவாசன்!

பொன்முடி வழக்கு - நீதித்துறையில் உதவுபவர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும் - வானதி சீனிவாசன்!

அழகிரியுடன் சந்திப்பு

அதன்பின், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் இல்லத்துக்கு சென்ற பொன்முடி, உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், தனது மகன் துரை தயாநிதியின் சிகிச்சைக்காக, சென்னையில் தங்கியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி,

பொன்முடியை சந்தித்த மு.க.அழகிரி; என்ன நடந்தது - பரபரப்பில் அரசியல் களம்! | Azhagiri Meeting With Ponmudi Details

பொன்முடியின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து 30 நிமிடங்கள் பேசியுள்ளார். அப்போது, உங்களுக்கான சோதனையில் மீண்டு வருவீர்கள். உச்ச நீதிமன்றத்தில் கட்டாயம் உங்களுக்கு விடுதலை கிடைக்கும். மீண்டும் நீங்கள் அமைச்சர் ஆவீர்கள் என அழகிரி ஆறுதல் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.