பொன்முடி வழக்கின் தீர்ப்பு - அதிரடியாக ரத்து செய்த உயர்நீதிமன்றம்..! பரபரப்பு உத்தரவு..!
இன்று முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்திருந்த மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
பொன்முடி வழக்கு
தமிழக உயர்கல்வி துறை அமைச்சராக இருந்து பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கில் சிக்கிய நிலையில், நேற்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.
அதன்படி, குற்றம்சாட்டப்பட்ட பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 50 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.
மேலும், 6 மாதகாலம் தண்டனையை நிறுத்திவைத்தது மட்டுமின்றி, மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசமும் அளித்து உத்தரவிட்டது.
ரத்து
இந்நிலையில், இன்று சென்னை நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்திருந்த மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில்,நீதிபதி ஜெயச்சந்திரன், சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சொத்துகளை தற்போதைய சூழலில் மீண்டும் முடக்க வேண்டிய அவசியம் இல்லை என தீர்ப்பளித்தார்.
மேலும், சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு தவறாக இருந்தாலும் தற்போது அதை மாற்ற முடியாது எனவும் நீதிபதி கூறினார். தேவைப்பட்டால் சட்டத்திற்கு உட்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும் அனுமதி வழங்கிய நீதிபதி, இந்த வழக்கை முடித்துவைத்தார்.