பொன்முடி வழக்கு - நீதித்துறையில் உதவுபவர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும் - வானதி சீனிவாசன்!

Tamil nadu Vanathi Srinivasan K. Ponmudy
By Jiyath Dec 22, 2023 07:49 AM GMT
Report

ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபடுபவர்களுக்கு உதவும் நீதித்துறையில் இருக்கின்ற நபர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பொன்முடிக்கு சிறை 

திமுக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் அவரை விடுவித்து உத்தரவிட்டது.

பொன்முடி வழக்கு - நீதித்துறையில் உதவுபவர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும் - வானதி சீனிவாசன்! | Action Taken Against Judge Too Vanathi Srinivasan

இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், அந்த தீர்ப்பை ரத்து செய்து பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி நேற்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், அவருக்கு ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அமைச்சர் பொன்முடி தனது அமைச்சர், எம்.எல்.ஏ பதவிகளை இழந்தார்.

இந்நிலையில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பேசுகையில் "பொன்முடி வழக்கில் தீர்ப்பு நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி இருக்கிறது.

நடவடிக்கை பாய வேண்டும்

அவர் மீதான வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதை யாரும் வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என மனு போடவில்லை. ஒரு நீதிமன்ற உத்தரவின் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆர்டர் வாயிலாக அப்பொழுது உயர்நீதிமன்றத்தில் பொறுப்பில் இருந்தவர்கள் அந்த வழக்கை விழுப்புரத்தில் இருந்து வேலூருக்கு மாற்றினர்.

பொன்முடி வழக்கு - நீதித்துறையில் உதவுபவர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும் - வானதி சீனிவாசன்! | Action Taken Against Judge Too Vanathi Srinivasan

அந்த விசாரணை கூட மாவட்ட நீதிபதி ஓய்வு பெறக்கூடிய ஒரு மாத காலத்திற்குள் விசாரித்து முடித்து பொன்முடி விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். இது எதை காட்டுகிறது என்றால் அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளில் அல்லது எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டு தண்டனை பெறுவது ஒரு புறம், இன்னொரு புறம் இவர்களுக்கு உதவுகின்ற நீதித்துறையில் இருக்கின்ற நபர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும்'' என்றார்.