" சிசேரியன் அதிகரிக்க காரணம் இது தான் " - அமைச்சர் மா.சு சொன்ன அதிர்ச்சி தகவல்!
பெண்களின் பணிச்சுமை குறைந்ததால் சிசேரியன் அதிகரிப்பு காரணம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மகப்பேறு
சென்னையில் தமிழக அரசு சார்பில் மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைப்பதற்கான பயிலரங்கம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசி அவர் , மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைப்பதற்கான தமிழக அரசு தீவிரம் காட்டி வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்,'' 20 ஆண்டுளுக்கு முன் பெண்கள் அதிக வேலைகளை செய்ததால் சுக பிரசவம் நிகழ்ந்தது.
அறுவை சிகிச்சை
ஆனால் கால நிலை மாற்றத்தால் தற்பொழுது உள்ள பெண்களுக்கு பணிச்சுமை குறைந்ததால் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெறுவது அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தமிழகம் முழுவதும் சுகப் பிரசவங்களில் எண்னிக்கை அதிகரிக்க வேண்டும். நாட்டிலேயே சிறந்த மகப்பேறு மருத்துவர்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள் என அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.