அட்டைப்பெட்டியில் குழந்தையின் உடல்: சுகாதாரத்துறை மீது தவறு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Tamil nadu Chennai Ma. Subramanian
By Jiyath Dec 12, 2023 07:44 AM GMT
Report

உயிரிழந்த குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் வைத்து ஒப்படைத்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். 

மா.சுப்பிரமணியன் 

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இறந்த குழந்தையின் உடல் அட்டைப் பெட்டிக்குள் வைத்து ஒப்படைத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அட்டைப்பெட்டியில் குழந்தையின் உடல்: சுகாதாரத்துறை மீது தவறு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்! | Baby Body Cardboard Box Ma Subramanian

இந்நிலையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது "பிரசவ வலியால் துடித்த பெண்ணை காப்பற்ற சம்பந்தப்பட்ட நபர் தனியார் மருத்துவமனையை அணுகியுள்ளார்.

மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதுகாப்பு கருதி மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக ஆம்புலன்ஸ் வரவழைத்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அந்த பெண்ணிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சுகாதாரத்துறையின் தவறு இல்லை

அதே நேரத்தில் குழந்தையை பரிசோதித்தபோது குழந்தை இறந்தது தெரியவந்தது. பின்னர் குழந்தையின் உடல் மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அட்டைப்பெட்டியில் குழந்தையின் உடல்: சுகாதாரத்துறை மீது தவறு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்! | Baby Body Cardboard Box Ma Subramanian

குழந்தையின் தந்தை பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டதால் அடிப்படையில் உடல் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. உயிரிழந்த குழந்தையை அட்டைப் பெட்டியில் வைத்து ஒப்படைக்கப்பட்டது தவறானது என்பதால் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சுகாதாரத்துறை மீது எந்த தவறும் இல்லை. இந்த விவகாரத்தில் மருத்துவமனை பணியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக 3 பேர் கொண்ட மருத்துவர்கள் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்று கூறியுள்ளார்.