மனு அளிக்க வந்த பெண்ணை தாக்கிய அமைச்சர்...மக்கள் அடிமையா? வைரலான வீடியோ!
மனு கொடுக்க வந்த தொகுதி மக்களை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேப்பரால் அடித்த வீடியோ இணையத்தில் பரவிவருகிறது.
ஊழல் புகார்
தமிழக அரசு மீது குறைக்கூறிக்கொண்டே இருக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர்கள் மீது ஊழல் புகார் உள்ளிட்டவற்றை கூறிவருகிறார். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியிடமும் சில நேரம் டிவிட்டர் சண்டை போடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
மக்கள் என்ன உங்கள் அடிமைகளா?
— K.Annamalai (@annamalai_k) July 12, 2022
விருதுநகர்,பாலவனத்தம் கிராமத்தில் தீர்வு தேடி வந்த ஏழைத்தாயை அடித்த @arivalayam அமைச்சர் KKSSR ராமச்சந்திரன்
அடுத்த 48 மணி நேரத்திற்குள் அமைச்சர் பதவி விலக வேண்டும் அல்லது அவரது வீட்டை @BJP4TamilNadu முற்றுகையிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்! pic.twitter.com/iV4fyKLnXQ
அண்மையில் ஊட்டசத்து பவுடர் தொடர்பான டெண்டரில் முறைகேடு இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியனை சீண்டினார். ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்காக
மக்கள் என்ன உங்கள் அடிமையா
தமிழக அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதாகவும் அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.இந்நிலையில் மக்கள் என்ன உங்கள் அடிமையா? என்ற தலைப்பில் அண்ணாமலை டிவிட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில், “விருதுநகர்,பாலவனத்தம் கிராமத்தில் தீர்வு தேடி வந்த ஏழைத்தாயை அடித்த அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் அடுத்த 48 மணி நேரத்திற்குள் அமைச்சர் பதவி விலக வேண்டும் அல்லது
பாஜக முற்றுகையிடும்
அவரது வீட்டை தமிழக பாஜக முற்றுகையிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்!” எனக் காட்டமாக தெரிவித்ததுடன் ஆதாரமாக அந்த வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.
இங்கிலாந்து அணியை பந்தாடிய இந்தியா அணி அபார வெற்றி..!