ராகுலால் இந்தப் பிறவியில் முடியாது -மத்திய அமைச்சர் பரபரப்பு பேச்சு!
ஆர்.எஸ்.எஸ். பற்றி தெரிந்துக்கொள்வதற்கு ராகுலால் இந்தப் பிறப்பில் முடியாது என்று மத்திய அமைச்சர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ராகுல் காந்தி
கடந்த 8ம் தேதி எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி அமெரிக்காவுக்குச் சென்றார். டெக்சாஸ், வாஷிங்டன் ஆகிய மாகாணங்களில் 3 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளார்.முன்னதாக டெக்ஸாஸ் மாகாணத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து டல்லாஸில் நடந்த புலம்பெயர்ந்த இந்தியர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசிய அவர் ,'' நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் பிறகு இந்திய மக்கள் பிரதமர் மோடியைப் பார்த்து அஞ்சுவதை நிறுத்திவிட்டனர். ஆர்.எஸ்.எஸ்., இந்தியாவுக்கு ஒற்றைச் சிந்தனை மற்றும் பிற்போக்கான கருத்துகளை நம்புகிறது.
ஆனால், காங்கிரஸ் பன்முக சிந்தனையை நம்புகிறது. ஆர்.எஸ்.எஸ்., பெண்கள் சமையலறையில் இருக்க வைக்க முயற்சிக்கிறது. அதே காங்கிரஸ் பெண்களின் விருப்பங்களை மதிக்கிறது. பெண்கள் அனைத்து துறைகளிலும் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் நினைக்கிறது என்று பேசியிருக்கிறார்.
பரபரப்பு பேச்சு
இந்த நிலையில் இந்தியாவின் நற்பெயரை கெடுப்பதற்குத்தான் ராகுல் வெளிநாடு சென்றிருப்பதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது :ராகுல் அவரது பாட்டியிடம் சென்று கேட்பதற்கு ஏதும் தொழில்நுட்பம் இருந்தால் அதன்மூலம் அவரிடம் சென்று ஆர்.எஸ்.எஸின் பங்கு குறித்துக் கேட்டறிய வேண்டும்.
அப்படி இலையென்றால் வரலாற்றின் பக்கங்களைப் பார்க்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ். பற்றி தெரிந்துகொள்வதற்கு ராகுலால் இந்தப் பிறப்பில் முடியாது. அவர் பல பிறப்புகளை எடுக்க வேண்டும். துரோகியால் ஆர்.எஸ்.எஸ். பற்றி புரிந்துக்கொள்ள முடியாது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.