பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தை கிழித்து தூக்கி எறிந்துவிடும் - ராகுல் காந்தி!

Indian National Congress Rahul Gandhi India Madhya Pradesh Lok Sabha Election 2024
By Jiyath May 01, 2024 02:41 AM GMT
Report

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தை கிழித்து தூக்கி எறிந்துவிடும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

ராகுல் காந்தி

மத்தியப் பிரதேச மாநிலம் பிண்ட் நகரில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அரசியல் சாசன புத்தகத்தின் ஒரு பிரதியை கையில் ஏந்தியவாறு பங்கேற்றார்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தை கிழித்து தூக்கி எறிந்துவிடும் - ராகுல் காந்தி! | Bjp Will Throw Away Constitution Says Rahul Gandhi

அப்போது பேசிய அவர் "மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஏழைகள், பட்டியலின, பழங்குடியின மற்றும் ஓபிசிக்களுக்கு உரிமை வழங்கிய அரசியல் சாசனத்தை கிழித்து தூக்கி எறிந்துவிடும். பாஜக இந்தப் புத்தகத்தை தூக்கி எறிய வேண்டும் என்று விரும்புகிறது.

இப்படி ஒரு நிலைமையா? பிரசாரத்தில் 50 பேர் கூட இல்லை - கேலிக்கு ஆளான குஷ்பு!

இப்படி ஒரு நிலைமையா? பிரசாரத்தில் 50 பேர் கூட இல்லை - கேலிக்கு ஆளான குஷ்பு!

மகாலட்சுமி திட்டம்

பிரதமர் நரேந்திர மோடியால் 22 முதல் 25 வரை தொழிலதிபர்களை கோடீஸ்வரர்களாக மாற்ற முடிந்தால், காங்கிரஸ் கோடிக்கணக்கான பெண்களை லட்சாதிபதிகளாக மாற்றும். தற்போது நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல, இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான போராட்டம்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தை கிழித்து தூக்கி எறிந்துவிடும் - ராகுல் காந்தி! | Bjp Will Throw Away Constitution Says Rahul Gandhi

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்குவோம். காங்கிரஸின் மகாலட்சுமி திட்டம் நாட்டில் பெண்களை லட்சாதிபதிகளாக மாற்றும். பாஜக இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை என்றால், ஏன் ரயில்வே மற்றும் பிற பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குகிறது?” என்று கேள்வி எழுப்பினார்.