நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு சாதிவாரி, பொருளாதார கணக்கெடுப்பு நடத்துவோம் - ராகுல் காந்தி உறுதி!

Indian National Congress Rahul Gandhi Gujarat India Lok Sabha Election 2024
By Jiyath Apr 29, 2024 11:02 AM GMT
Report

அரசியலமைப்பை மாற்றுவதற்கு பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் திட்டமிடுகிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

ராகுல் காந்தி 

குஜராத் மாநிலம் பதான் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சந்தன்ஜி தாக்கூர் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பதான் நகரில் பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பிரச்சாரம் செய்தார்.

நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு சாதிவாரி, பொருளாதார கணக்கெடுப்பு நடத்துவோம் - ராகுல் காந்தி உறுதி! | Congress Will Conduct Caste And Economic Survey

அப்போது பேசிய அவர் "நாட்டின் மக்கள் தொகையில் 99 சதவீதம் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. மக்கள் உள்ளனர். ஆனால் கார்ப்பரேட், ஊடகம், தனியார் மருத்துவமனைகள், தனியார் பல்கலைக்கழகங்கள் அல்லது அரசு உயர் பதவிகள் போன்றவற்றில் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை.

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு 'அம்பேத்கர் சுடர்' விருது - விசிக அறிவிப்பு!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு 'அம்பேத்கர் சுடர்' விருது - விசிக அறிவிப்பு!

சாதிவாரி கணக்கெடுப்பு

நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு, பொருளாதார கணக்கெடுப்பு நடத்துவோம். அரசியலமைப்பை மாற்றுவதற்கு ஆளும் பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் திட்டமிடுகின்றன.

நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு சாதிவாரி, பொருளாதார கணக்கெடுப்பு நடத்துவோம் - ராகுல் காந்தி உறுதி! | Congress Will Conduct Caste And Economic Survey

இட ஒதுக்கீட்டு அமைப்புக்கு எதிராகவும் உள்ளனர். இவர்களின் ஆட்சிக்காலத்தில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது' என்று தெரிவித்துள்ளார்.