சட்டென பின்னோக்கி நகர்ந்த லாரி - நூலிழையில் இளம்பெண் செய்த செயல்
நூலிழையில் இளம்பெண் ஒருவர் உயிர் தப்பிய வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
லாரி விபத்து
கேரளா, கோழிக்கோடு அருகே மினி லாரி பின்னால் இளம்பெண் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த லாரி நின்றது. உடனே, பின்னால் வந்து கொண்டிருந்த இளம்பெண்ணும் ஸ்கூட்டியை நிறுத்தினார்.
ஆனால் சிறிது நேரத்தில் அந்த லாரி திடீரென எதிர்பார்க்காத நிலையில் வேகமாக பின்னோக்கி வந்தது. இதை சற்றும் எதிர்பாராத அந்த இளம்பெண், ஸ்கூட்டியை பின்னோக்கி தள்ள முற்பட்டார்.
தப்பிய இளம்பெண்
ஆனால் அதற்குள் அந்த லாரி ஸ்கூட்டியை இடித்து தள்ளிவிட்டு சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் இளம்பெண், லாரியின் உள்பக்கம் சிக்காமல் பக்கவாட்டில் சரிந்து விழுந்ததால், நல்வாய்ப்பாக உயிர்தப்பினார்.
இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், லாரி கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி வந்து விபத்துக்குள்ளானது தெரிய வந்துள்ளது.