பூமியில் விழுந்த விண்கல்; முதல்முறையாக அந்த சத்தம் பதிவு - 4.5 பில்லியன் ஆண்டுகள் பழசாம்..
முதன்முறையாக விண்கல் விழும் சத்தம் கேமராவில் பதிவாகியுள்ளது.
விண்கல்
கனடாவை சேர்ந்த லாரா கெல்லி மற்றும் ஜோ வாலாடியம் ஆகியோர் கடந்த 2024 இல் தங்கள் வீட்டிற்கு வெளியே சில மர்மமான பொருட்கள் கிடப்பதை கண்டறிந்துள்ளனர்.
தொடர்ந்து ரிங் கேமரா பதிவை ஆராய்ந்துள்ளார். அதில், வானத்திலிருந்து ஒரு கல் விழுந்து சிதறுகிறது. உடனே அந்த தூசி படிந்த பாறையில் இருந்து 7 கிராம் பொருட்களை சேகரித்து ஆல்பர்ட்டா பல்கலைகழகத்தின் டாக்டர் கிறிஸ் ஹர்டுக்கு அனுப்பினார்.
விண்வெளி பாறை
பின் அது விண்வெளி பாறை என்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கல் இப்போது பிரின்ஸ் எட்வர்ட் தீவின் தலைநகரான 'சார்லட்டவுன் விண்கல்' (Charlottetown) என்று அழைக்கப்படுகிறது.
This is the 1st time the sound of a meteorite impact has been heard! Sound up. From Prince Edward Island, Canada.https://t.co/OuE7Q3jlfb pic.twitter.com/B8Ie0fjr6E
— Dr Dan Jones (@Hookean1) January 15, 2025
இது மிகவும் பொதுவான விண்கற்களான காண்டிரைட்டுகளால் ஆனது. காண்ட்ரைட் விண்கற்கள் சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய குடும்பம் உருவானதில் இருந்து தப்பிப்பிழைத்தது.
இந்த பாறை 329 மில்லியன் கி.மீ. தூரம் பயணித்திருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும், பூமியை விண்கல் தாக்குவது கேமராவில் பதிவானது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.