ஆண்களின் ஆயுட்காலம் குறையுதா?.. என்ன காரணம்? - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
ஆய்வில் ஆண்களின் ஆயுட்காலம் குறைவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆயுட்காலம்
உலகின் பல நாடுகளில் சராசரியாக பெண்களை விட ஆண்களுக்கு ஆயுட்காலமா குறைந்துகொண்டே வருகிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் சராசரியாக பெண்களின் ஆயுட்காலம் 79 ஆண்டுகள், ஆனால் ஆண்களின் ஆயுட்காலம் சராசரியாக 73 ஆண்டுகள்.
ஜெர்மனியிலும் இதுபோல் பெண்களை விட ஆண்களின் ஆயுட்காலம் குறைவாக உள்ளது. இது குறித்து ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனா தொற்றுக்கு பின்னர், ஆண்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
காரணம்
இந்நிலையில், கோவிட் தாக்கத்திற்கு பின்னர் ஆண்கள் ஆயுட்காலம் குறைந்ததாக தெரியவந்தது. இது மட்டுமல்ல ஆண்கள் அதிகமாக போதைப்பொருட்களுக்கு அடிமையாவது, மதுப்பழக்கம், புகைபிடித்தல் போன்றவையும் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கோவிட்க்கு பிறகு ஆண்களின் தற்கொலை அதிகரித்துள்ளதால் இறப்பு விகிதம் அதிகமானதாக தெரிவித்துள்ளனர். பின்னர், அவர்களுக்கு சரியான உடல்நிலை பரிசோதனை இல்லாததால் மற்றும் ஆபத்தான இடங்களில் பணிபுரிவது போன்றவை முக்கிய காரணமாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.