16 சிறுவர்களை சீரழித்த காப்பக பொறுப்பாளர் - அம்பலமான கொடூர செயல்கள்!
ஊழியர் ஒருவர் சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை
அமெரிக்கா, கலிபோர்னியாவில் உள்ள குழந்தைகள் காப்பகம் மிக பிரபலம். அதன் பொறுப்பாளராக பணிபுரிந்தவர் மத்தேயு ஜாக்ரெஸ்கி (34).
இந்நிலையில், 8 வயது சிறுவன் ஒருவனிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக பெற்றோர், இவர் மீது போலீஸில் புகார் அளித்தனர்.
707 ஆண்டுகள் சிறை
தொடர்ந்து விசாரணையில், தமது பொறுப்பில் விடப்பட்ட சிறார்களில் 16 பேர்களை பாலியல் துன்பறுத்தலுக்கு ஆளாக்கியதுடன் ஆபாச காட்சிகளை காணொளியாக பதிவும் செய்துள்ளது தெரியவந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வேலியே பயிரை மேய்ந்த நிலை எனக் கூறி 707 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், நீதிமன்றத்தில் மத்தேயு ஜாக்ரெஸ்கி, "உங்கள் பிள்ளைகள் முகத்தில் புன்னகையை வரவழைக்க நான் முயன்றேன், நாங்கள் பகிர்ந்து கொண்ட அனைத்து நல்ல நேரங்களும் 100 சதவீதம் உண்மையானவை எனத் தெரிவித்துள்ளார்.