வருங்காலத்தில் ஆண்களே இல்லாமல் போகலாம் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

World
By Sumathi Nov 14, 2024 10:00 AM GMT
Report

Y குரோமோசோமின் மறைவு குறித்த ஆய்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Y குரோமோசோம்

கிழக்கு ஐரோப்பாவின் மோல் வோல்ஸ் மற்றும் ஜப்பானின் ஸ்பைனி எலிகள் போன்ற சில இனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் Y குரோமோசோம்கள் முற்றிலும் மறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

வருங்காலத்தில் ஆண்களே இல்லாமல் போகலாம் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்! | Men Y Chromosomes May Disappear In Future

இந்த எலிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் X குரோமோசோம்களை மட்டுமே கொண்டுள்ளது. Y குரோமோசோமின் மறைவு, பன்முக மனித இனங்கள் தோன்றவும் வழிவகுக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

27 வருடமாக பெண்; திருமணத்திற்கு முன் ஆண் என அறிந்ததால் பயங்கர அதிர்ச்சி - பின்னணி என்ன?

27 வருடமாக பெண்; திருமணத்திற்கு முன் ஆண் என அறிந்ததால் பயங்கர அதிர்ச்சி - பின்னணி என்ன?

மரபணு பாதுகாப்பு

ஆனால் Y குரோமோசோம் எனப்படும் ஒரு மரபணுவில் பல பாதுகாப்பு அமைப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். முன்னதாக, 166 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் மற்றும் பிளாட்டிபஸ்கள் பிரிந்தது முதல், Y குரோமோசோமில் பல ஜீன்கள் குறைந்துள்ளன.

y chromosomes

900 என்று இருந்த ஜீன்களின் எண்ணிக்கை, தற்போது 55 ஜீன்களுக்கு குறைந்துள்ளது. ஒரு மில்லியன் வருடங்களில் சுமார் 5 ஜீன்கள் குறைந்துள்ளது.

இதே நிலை தொடரும் பட்சத்தில், அடுத்த 11 மில்லியன் ஆண்டுகளில் Y குரோமோசோம் முற்றிலும் மறைந்து போகலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், Y குரோமோசோம் அதிகமாக ‘Junk DNA’ கொண்டுள்ளதால் பல தலைமுறைகளுக்குப் பிறகு மறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.