கருச்சிதைவு ஏன் ஏற்படுகிறது? காரணங்களும், அறிகுறிகளும்!

life-style-health
By Nandhini Jun 28, 2021 08:19 AM GMT
Report

உலகில் உள்ள மற்ற நாடுகளை விட இந்திய பெண்கள் மீண்டும் மீண்டும் கருச்சிதைவால் பாதிக்கப் படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. தொடர்ச்சியான கருச்சிதைவால் இந்தியாவில் 7.46 சதவீதம் பெண்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

இதற்கு முக்கிய காரணமாக மரபணு, வரலாற்று ரீதியான காச நோய் போன்றவற்றால் பெண்களின் கருப்பைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று ஆய்வு மேற்கொண்ட மருத்துவர் தெரிவித்துள்ளார். கருச்சிதைவு நிகழ பல்வேறு காரணங்கள் உண்டு.

உணவு முறை, உடல் ஆரோக்கியம், வாழ்க்கை முறை என பல விதமான காரணங்கள் கருச்சிதைவை உண்டாக்க கூடும். ஒரு பெண் கருவுற்ற முதல் ட்ரைமெஸ்டரில் முதல் மூன்று மாதங்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.

சிலருக்கு 20 வாரங்களின் போதும் நடக்கலாம். எனினும் இந்த காலம் அரிதாகவே நிகழ கூடும். இந்த கருச்சிதைவு பெண்களுக்கிடையே வேறுபடலாம்.

கருச்சிதைவு ஏன் ஏற்படுகிறது? காரணங்களும், அறிகுறிகளும்! | Life Style Health

கருச்சிதை என்றால் என்ன?

ஒரு பெண் தாயாகும் விஷயம் மிக அற்புதமானது. பலவித கனவுகளுடன் தனது கருவை, தாயானவள் நேசிக்கத் தொடங்குகிறாள். ஆனால் விதி வசத்தால் எல்லா பெண்களாலுமே குழந்தையைப் பெற்றெடுக்க முடிவதில்லை. சிலரால், சில காரணங்களால் கருவைச் சுமக்க முடியாமல் போகிறது.

அந்தக் கருவானது குழந்தையாக முழு உருவத்தை அடையும் முன்பே, அதாவது 28 வாரங்களுக்குள் தானாகவோ அல்லது மருத்துவ முறையிலோ தாயை விட்டு ப் பிரியும் நிகழ்வைத் தான் ‘அபார்ஷன்’ என்கிறோம். அபார்ஷனை வகைப்படுத்த முடியுமா? முடியும். அபார்ஷனை மருத்துவ முறையில் மூன்று விதமாக வகைப்படுத்தலாம்.

  • தானாக ஆகும் அபார்ஷன்
  • எம்.டி.பி. (Medical Termination Pregnancy)
  • செப்டிக் அபார்ஷன் தானாக ஆகும்.

கருச்சிதைவு அறிகுறிகள் -

  • திடிர் இரத்தப் போக்கு
  • அடிவயிற்றில் வலி

கருச்சிதைவுக்கான காரணங்கள் -

கருவுற்று முதல் மூன்று மாதங்களில் ஏற்படும் கருச்சிதைவு பெரும்பாலும் கருமுட்டை விந்தணு சேர்க்கையில் ஏற்பட்ட குரோமோசோம்கள் எண்ணிக்கை குளறுபடியால் மேற்கொண்டு கரு வளர இயலாமல் கலைந்து விடுகிறது.

கருவுற்ற முட்டையானது ஃபாலோபியன் குழாயில் (fallopian tube) இருந்து பயணித்து கர்ப்பப்பையை வந்தடையும். கர்ப்பப்பை சுவற்றில் கருவுற்ற முட்டை (embryo) ஊன்றி வளர ஆரம்பிக்கும். இந்த செயல்பாடுகளில் தடை ஏற்பட்டால் கரு கலைந்து விடுகிறது.

  • கருவுற்ற பெண்ணின் வயது
  • அடிக்கடி கருச்சிதைவு
  • நாட்பட்ட நோய்கள்
  • இடுப்பு மற்றும் கர்ப்பப்பை கோளாறுகள்
  • நோய் தொற்று
  • புகை மற்றும் குடிப்பழக்கம்
  • மாத்திரைகள்
  • உடற்பருமன்
  • கருக்கலைப்பினால் ஏற்படும் பின்விளைவுகள் -
  • கருப்பையிலும் அதைச் சுற்றியுள்ள இழைகளிலும் இன்ஃபெக்ஷன் ஏற்படும்.
  • ஒரே கலைப்பில் கரு கலையாமல் மறுபடியும் கருக்கலைப்பு செய்ய வேண்டிவரும்.
  • கருப்பை வாயில் (cervix) கிழிந்து போகலாம்.
  • ஆனால், இதை தையல்கள் மூலம் சரிசெய்து விடலாம்.
  • கருப்பை சுருங்காமல் அதீத இரத்தப்போக்கு ஏற்படும்.
  • அதிகப்படியான இரத்தப்போக்கினால் உடல் பலவீனமாகிப் போகும்.