27 வருடமாக பெண்; திருமணத்திற்கு முன் ஆண் என அறிந்ததால் பயங்கர அதிர்ச்சி - பின்னணி என்ன?

China
By Sumathi May 10, 2024 12:51 PM GMT
Report

பெண் ஒருவர் திருமணத்திற்கு பின் ஆண் என தெரிந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

குரோமோசோம் மாறுபாடு

சீனாவைச் சேர்ந்தவர் லி யுவான். இந்தப் பெண் மார்பக வளர்ச்சி, சீரற்ற மாதவிடாய் போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளார்.

27 வருடமாக பெண்; திருமணத்திற்கு முன் ஆண் என அறிந்ததால் பயங்கர அதிர்ச்சி - பின்னணி என்ன? | Chinese Woman Finds Biologically Male In Wedding

இதனால், 18 வயதிலிருந்தே மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனையில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து, ஹார்மோன் அளவுகள் அசாதாரணமாக இருப்பதும், கருப்பை செயலிழப்பும் கண்டறியப்பட்டுள்ளது.

குழந்தை இல்லையா; மகிழ்ச்சியான தகவல் - அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

குழந்தை இல்லையா; மகிழ்ச்சியான தகவல் - அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

அரிய கோளாறு 

அதன்பின் சில வருடங்கள் கழித்து யுவானின் திருமணத்திற்கு முன்பு மூத்த மகப்பேறு மருத்துவ நிபுணரான டுவான் ஜீ அவரை பரிசோதனைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

27 வருடமாக பெண்; திருமணத்திற்கு முன் ஆண் என அறிந்ததால் பயங்கர அதிர்ச்சி - பின்னணி என்ன? | Chinese Woman Finds Biologically Male In Wedding

அதன்படி, மேற்கொண்டதில் congenital adrenal hyperplasia (CAH) என்ற அரிய கோளாறு இருப்பது தெரியவந்தது. மேலும், அவருக்கு ஆண் பாலின குரோமோசோம்கள் இருப்பதும் தெரிந்தது. ஆணுக்குரிய பிறப்புறுப்பு அடிவயிற்றின் உள்ளே இருந்துள்ளது.

50,000 பேரில் ஒருவருக்கு மட்டுமே இந்தக் குறைபாடு ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.