ஈகோ பிரச்சனை.. ஆண்கள் திகம் பயன்படுத்தும் வார்த்தை இதுதான் - தெரிஞ்சுக்கோங்க!
ஈகோ பிரச்சனைகள் உள்ள ஆண்கள் இந்த வார்த்தைகளை அடிக்கடி கூறுவார்கள் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஈகோ
ஆணும் பெண்ணும் ஒரு உறவில் நீண்ட காலம் தொடர வேண்டும் என்றால் அதற்குப் புரிதல் முக்கியம். நமக்கு என்ன வேண்டும், நமக்கு என்ன தேவை, நாம் ஏன் கோபமாக இருக்கிறோம், ஏன் சோகமாக இருக்கிறோம் அல்லது என்ன நினைக்கிறோம் என்பதைத் துணை எப்போதும் அறிந்திருக்க வேண்டும்.
அவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் . ஆனால் சில உறவுகளில் தனது துணையை ஈகோ பிரச்சனைகள் வரும். அப்படி ஆண்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை இந்த பதிவில் பார்க்கலாம். அதிக ஈகோ உள்ள ஆண்கள் மத்தியில் எல்லாம் நானே செஞ்சேன் என்பது மிகவும் பொதுவாக உள்ளது.
தங்களைப் பற்றி பெருமையாக வெளிப்படுத்திக் கொள்வது. மேலும் தனது துணையுடன் மிகவும் தன்மையாக இருப்பதாகத் தெரிந்தாலும், தன்னுடைய சாதனைகளைப் பற்றி பெருமிதம் கொள்ளும் குணம் இது . உளவியல் படி சொன்னால் தங்களை தாங்களே புகழ்ந்து கொள்ளும் ஒரு முறையாகும்.
ஆண்கள்
ஒரு உறவில் மனதை புரிந்து கொள்வது அவசியம் . அதிலும் அதிக ஈகோ உள்ள ஆண்கள் இதனைப் பயன்படுத்துவது உண்டு. தன்னம்பிக்கை அதிகரிக்கும் போது தலைக்கனம் ஆகிறது. அதே போலக் குறைந்த திறன் கொண்டவர்கள் பெரும்பாலும் தங்களை விடச் சிறந்தவர்கள் யாருமே இல்லை என நினைத்துக் கொள்வது.
எனக்கு யாரும் தேவையில்லை என்று சொல்லுவது, அதற்கும் ஒருபடியாகத் தான் சொல்வதும் செய்வதும் ,எப்போதுமே சரி என்ற மனநிலை மற்றும் எது சிறந்தது என்று எனக்குத் தெரியும் என்று சொல்வது. மேலும் தனது துணையுடன் பேசும் போது சட்டென்று தாழ்வாக உணரச்செய்வது.
பெரிய ஈகோ உள்ள ஆண்கள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகளில் இது முக்கியமானது நான் தப்பே செய்ய மாட்டேன் என்று சொல்லிக்கொள்வது. இவை உறவில் கருத்து வேறுபாடுகள் முதல் மனதைப் புரிந்து கொள்வது வரை, விரக்தி மற்றும் மனக்கசப்புக்கு வழிவகுக்கும்