Friday, Jul 4, 2025

தாடி வைத்த ஆண்கள் தான் சிறந்த காதலர்களாம் - ஏன் தெரியுமா?

Relationship
By Sumathi a year ago
Report

உறவின் வெற்றிக்கு முகத்தில் முடி இருப்பது முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.

அதிக தாடி

Archives of Sexual Behavior-ல் காதல் உறவு குறித்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் 18 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட 414 ஆண்கள் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தாடி வைத்த ஆண்கள் தான் சிறந்த காதலர்களாம் - ஏன் தெரியுமா? | Men With Beards More Are Stable As Relationship

அதன்படி, அதிக தாடி கொண்ட ஆண்கள் துணையைத் தேடும் ஆர்வத்தை குறைவாகவே கொண்டுள்ளனர். ஏனெனில் அவர்கள் தற்போதைய உறவிலேயே மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால், மறுபுறம், க்ளீன் ஷேவ் செய்யப்பட்ட ஆண்கள் தங்கள் அடிக்கடி புதிய துணையைத் தேடுகிறார்கள்.

தாடி வளர்த்தால்,நோய்கள் ஓடி ஒளியும்!

தாடி வளர்த்தால்,நோய்கள் ஓடி ஒளியும்!

நீடித்த உறவு

தாடி வைத்த ஆண்களுக்கும் உறவுகளை அணுகுவதற்கும் இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்துவதற்கு காரணம், தாடியை வளர்க்கவும், பராமரிக்கவும் அதிக முயற்சி எடுக்க வேண்டும். தாடி அடர்த்தியாகவும், கடினமாகவும் வளர அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும்.

தாடி வைத்த ஆண்கள் தான் சிறந்த காதலர்களாம் - ஏன் தெரியுமா? | Men With Beards More Are Stable As Relationship

அடர்த்தியான தாடி ஒழுக்கத்தைக் குறிக்கிறது. மேலும், அதிக தாடி இருப்பது ஒரு மனிதனின் சமூக நோக்கங்கள் புதிய உறவை தேடுவதில் இருந்து கவனம் செலுத்துவதிலிருந்து நீண்ட கால காதல் உறவுகள் மற்றும் குடும்பத்தில் கவனம் செலுத்துகிறது என்பதற்காக அறிகுறிகளாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.