மது குடித்தால் இரவில் நடப்பது மறந்து விடுமா? உண்மை இதுதான்!
மது குடித்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து பார்க்கலாம்.
மது பழக்கம்
மது அருந்துதல் நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. இதனால், மூளையின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு நினைவாற்றம், முடிவெடுக்கும் திறன் குறைகிறது.
தினமும் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் மயக்கத்திற்கு ஆளாக கூடும். இதனால் போதையில் என்ன நடந்தாலும் நினைவில் இருக்காது. மது நியூரோ டிரான்ஸ்மிட்டர்களை அதிகரித்து மூளையை அமைதியாக வைக்கும்.
நினைவாற்றல்
எனவே, சிந்திக்கும் திறன் குறைகிறது. மேலும், நியூரான்களின் அளவும் குறைவதால் நினைவாற்றல் குறைகிறது. மது உடலில் உள்ள நீரை வெளியேற்றுவதால் சோர்வு, தலைவலி, வியர்த்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
தினமும் மது அருந்தினால் அல்சைமர்ஸ் போன்ற பிரச்சனைகள் வரும் அபாயம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.