ஒரே நேரத்தில் 7 பாட்டில் மது குடித்த இளைஞர் - துடி துடித்து உயிரிழந்த பரிதாபம்

China Death
By Thahir May 29, 2023 11:22 AM GMT
Report

ஒரே நேரத்தில் 7 பாட்டில் மது குடித்த இளைஞர் 12 மணி நேரத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நேரத்தில் 7 பாட்டில் மது குடித்த இளைஞர்

சீனாவில் ஜியாங்சு மாகாணத்தை சேர்ந்த சுமூக வலைதள பயனரான வாங்க என்பவர் சீன வோட்கா எனப்படும் பைஜியு வகை மதுவை அதிகமாக குடித்துள்ளார்.

மேலும் தான் மது குடித்ததை டிக் - டாக் வெர்சனான டூயிங் என்ற வலைதளத்தில் அவர் நேரலை செய்துள்ளார். அப்போது ஒரே நேரத்தில் 7 பாட்டில் மதுவை அவர் மூச்சு முட்ட குடித்துள்ளார்.

Youth dies after drinking 7 bottles of alcohol

பின்னர் 12 மணி நேரத்திற்கு பிறகு அவர் உயிர் இழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். வாங் அடிக்கடி தான் மது குடிப்பதை தனது சமூக வலைத்தள பக்கதில் நேரலை செய்து வந்த நிலைியல் சமூக வலைதள ஒளிப்பரப்புக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும் அவர் புதிய கணக்கை ஆரம்பித்து மது குடிப்பதை ஒளிப்பரப்பியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்தை தொடர்ந்து லைக்குகளை பெறுவதற்காக விபரீத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதோடு, சம்மந்தப்பட்ட வலைதளங்களுக்கு கட்டுபாடுகள் விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுத்து வருகிறது.