சென்னை வெள்ளம்: அச்சுறுத்தும் 'மீலியாய்டோசிஸ்' தொற்று - உயிரிழப்புக்கு கூட வாய்ப்பு!

Tamil nadu Chennai Virus Michaung Cyclone
By Jiyath Dec 19, 2023 03:00 AM GMT
Report

சிகிச்சையை புறக்கணித்தால் மீலியாய்டோசிஸ் தொற்று முக்கிய உறுப்புகளை செயலிழக்கச் செய்து உயிரிழப்புக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மீலியாய்டோசிஸ்

சென்னையில் ‘மீலியாய்டோசிஸ்’ தொற்று பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெரு வெள்ளம் போன்ற பேரிடர் சூழலுக்குப் பிறகு ‘மீலியாய்டோசிஸ்’ எனப்படும் பாக்டீரியா தொற்று உருவெடுக்கத் தொடங்குகிறது.

சென்னை வெள்ளம்: அச்சுறுத்தும்

இது விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் ஒரு சேர பரவுகிறது. மண்ணுக்குள் பல வகையான பாக்டீரியாக்கள் வியாபித்துள்ளன. அதில் முக்கியமான ஒன்று ‘பர்கோல்டெரியா ஸ்யூடோமேய்’ எனப்படும் நுண்ணுயிரி. அதன் மூலமாகத்தான் ‘மீலியாய்டோசிஸ்’ தொற்று பரவுகிறது.

உரிய விழிப்புணர்வு இல்லாமல் சிகிச்சையை புறக்கணித்தால் அந்தத் தொற்று முக்கிய உறுப்புகளை செயலிழக்கச் செய்து உயிரிழப்புக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், கால்களிலோ, உடலிலோ காயங்கள் இருப்பவர்கள் மாசடைந்த நீரில் நடக்கும் போதும், தரமற்ற குடிநீரை அருந்தும் போதும் ‘மீலியாய்டோசிஸ்’ தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணம் - டோக்கன்கள் வழங்கும் தேதி அறிவிப்பு!

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணம் - டோக்கன்கள் வழங்கும் தேதி அறிவிப்பு!

வாய்ப்புகள் அதிகம்

அதே போன்று அந்த பாக்டீரியாக்கள் பரவியுள்ள காற்றை சுவாசிக்கும்போதும் அந்நோய் ஏற்படலாம். ஒருவரது உடலில் பாக்டீரியா கிருமி ஊடுருவிய இரண்டாவது வாரத்திலிருந்து அதன் அறிகுறிகள் தென்படும்.

சென்னை வெள்ளம்: அச்சுறுத்தும்

அந்த வகையில், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அண்மையில் பெய்த பெரு மழை மற்றும் வெள்ள பாதிப்புகளால் தற்போது ‘மீலியாய்டோசிஸ்’ தொற்று பரவ காரணமாக உள்ளது” என மருத்துவர்கள் கூறினர்.

எதிர்ப்பாற்றல் குறைந்தவர்கள், கட்டுப்பாடற்ற சர்க்கரை நோயாளிகள், கல்லீரல், சிறுநீரக பாதிப்புக்குள்ளானவர்கள், தலசீமியா நோயாளிகள், புற்றுநோயாளிகள், ஹெச்ஐவி நோயாளிகள், நுரையீரல் பாதிப்பு இருப்பவர்களுக்கு ‘மீலியாய்டோசிஸ்’ தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே, இதுகுறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என பொது நல மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உரிமை தொகை ரூ.1000: விண்ணப்பிக்காதவர்களுக்கு குட் நியூஸ் - அமைச்சர் முக்கிய தகவல்!

உரிமை தொகை ரூ.1000: விண்ணப்பிக்காதவர்களுக்கு குட் நியூஸ் - அமைச்சர் முக்கிய தகவல்!

தவிர்ப்பது எப்படி?

காயங்க களுக்கு உடனடி சிகிச்சை அவசியம், காயங்களில் மாசுபட்ட நீர் படாமல் பராமரித்தல், காலணி அணியாமல் வெளியே செல்லக் கூடாது, கைகளை அடிக்கடி சோப் மூலம் கழுவ வேண்டும், சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், எதிர்ப்பாற்றலை மேம்படுத்துதல்.