பண மாலையிலிருந்த ஒத்த நோட்..சினிமா பட பாணியில் புதுமாப்பிள்ளை சேஸிங் செய்த சம்பவம்!
பண மாலையிலிருந்து ஒத்த நோட்டைப் பறித்துக் கொண்டு ஓடிய வாகன ஓட்டுநரை புதுமாப்பிள்ளை சேஸிங் செய்து பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுமாப்பிள்ளை
வட மாநிலங்களில் திருமணத்தின் போது புதுமாப்பிள்ளைக்குப் பண மாலை அணிவிக்கப்படுவது வழக்கம்.தங்களது கழுத்தில் அணியப்படும் அந்த மாலையைப் புதுமாப்பிள்ளைகள் கவுரவமாகக் கருதப்படுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் வசித்து வருபவர் தேவ்குமார் .இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது அப்போது தனது உறவினர்களுடன் அவர் ஊர்வலமாகப் பவனி வந்துள்ளார்.
கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மாப்பிள்ளை அணிந்திருந்த பண மாலையை, அவ்வழியாகச் சரக்கு வாகனத்தில் வந்த ஓட்டுநர் அபகரிக்க முயன்றுள்ளார்.அப்போது அந்த இளைஞர் கையில் ஒத்த நோட்டு மட்டும் சிக்கியுள்ளது.
சேஸிங்
இதனை எடுத்துக் கொண்ட ஓட்டுநர் தனது வாகனத்தில் தப்பித்துள்ளார்.சினிமா பட பாணியில் வரும் காட்சிகள் போல் புதுமாப்பிள்ளை அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு பின் தொடர்ந்தார்.
தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற பரபரப்பு சேஸிங்கில், புதுமாப்பிள்ளை ஒருவழியாக அந்த வாகன ஓட்டுநரை பிடித்தார் .அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த உறவினர்களும் அந்த வாகன ஓட்டுநரை தாக்கினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி, கவனத்தைப் பெற்றுள்ளது.