மீரா மிதுனுக்கு திருமணமா? கோவிலில் இயக்குநருடன் மாலை மாற்றிய புகைப்படம் வெளியீடு..!

Meera Mitun Tamil Cinema
By Thahir Jul 08, 2022 10:47 PM GMT
Report

நடிகை மீரா மீதுன் இயக்குநருடன் கோவிலில் மாலை மாற்றி கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

திரைப்படங்களில் மீரா மிதுன்

மாடல் அழகியும் நடிகையுமான மீரா மீதுன் கடந்த 2015 ஆம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் திரிஷா உடன் ஒரு தோழியாக நடித்திருந்தார் மீரா மிதுன். ஆனால், எடிட்டிங்கில் அந்த சீன் நீக்கப்பட்டுவிட்டது.

மீரா மிதுனுக்கு திருமணமா? கோவிலில் இயக்குநருடன் மாலை மாற்றிய புகைப்படம் வெளியீடு..! | Meera Mithun Exchanged Garlands With The Director

பின்னர், ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெற்றி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 8 தோட்டாக்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சர்ச்சைகளில் சிக்கினார் 

இதனைத் தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில் நடிகர் கலையரசன் மனைவியாக நடித்திருந்தார். இதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.

மீரா மிதுனுக்கு திருமணமா? கோவிலில் இயக்குநருடன் மாலை மாற்றிய புகைப்படம் வெளியீடு..! | Meera Mithun Exchanged Garlands With The Director

பிக் பாஸ் நிகழச்சியில் கலந்து கொண்ட மீரா மிதுன் வெளியேறினார்.இதையடுத்து அவர் பிரபல நடிகர்கள் மற்றும் அவர்களுடைய மனைவி உள்பட அனைவரையும் இழிவாக பேசினார்.

குறிப்பாக பட்டியலின மக்கள் குறித்து தரக்குறைவாக பேசி இந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்த நிலையில் பல கண்டனங்கள் எழுந்தது.

மீரா மிதுன் கைது 

இதையடுத்து அவர் மீது பல்வேறு அமைப்பினர் காவல்துறையில் புகார் அளித்தனர். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பர் சாம் அபிஷேக் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்ட மீரா மிதுன் கடந்த 6 மாதங்களாக நீதிமன்றத்திற்கு அலைந்து திரிவதாகவும், சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

புதிய படத்தில் மீரா மிதுன்

தற்போது, இயக்குனர் அன்பரசன் என்பவர் இயக்கி வரும் மிகவும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படமான ‘பேய காணோம்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ஒரு பேய் மற்றொரு பேயை காணவில்லை என்று புகார் கொடுக்கும் விதமாக இப்படம் உருவாகி உள்ளது. கவுசிக் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில், மீரா மிதுன் தான் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இயக்குநருடன் திருமணமா?

மேலும் தருண் கோபி, கோதண்டம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது மீரா மிதுன் ‘பேய காணும்’ படத்தின் இயக்குனர் அன்பரசனுடன் நேற்று மாலை மாற்றிக்கொண்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

மீரா மிதுனுக்கு திருமணமா? கோவிலில் இயக்குநருடன் மாலை மாற்றிய புகைப்படம் வெளியீடு..! | Meera Mithun Exchanged Garlands With The Director

இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக, இவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்து கொண்ட புகைப்படம் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.  

மீரா மிதுனுக்கு திருமணமா? கோவிலில் இயக்குநருடன் மாலை மாற்றிய புகைப்படம் வெளியீடு..! | Meera Mithun Exchanged Garlands With The Director

எல்லாம் இதற்காகத்தான் : வெளியானது பொன்னியின் செல்வன் பாகம்-1