“நாளைக்கு சாயங்காலம் ரெடியா இருங்க” - சூர்யா ரசிகர்களுக்கு வெளியான மாஸ் அப்டேட்

EtharkkumThunindhavan எதற்கும் துணிந்தவன் நடிகர் சூர்யா விக்னேஷ் சிவன் அனிருத் ஜிவி பிரகாஷ்குமார்
By Petchi Avudaiappan Dec 14, 2021 04:36 PM GMT
Report

நடிகர் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

சூரரைப் போற்று, ஜெய் பீம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். மேலும் இந்தப்படத்தில் நடிகர் சத்யராஜ், திவ்யா, வினய், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

டி.இமான் இசையமைக்கும் இப்படமானது பிப்ரவரி 4 ஆம் தேதி 5 மொழிகளில் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு திரையரங்குகளில் சூர்யா படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கும் நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

அதன்படி பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விக்னேஷ் சிவன் எழுதிய இந்த பாடலை  இசையமைப்பாளர்கள் ஜிவி பிரகாஷ்குமார் மற்றும் அனிருத் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடல் நிச்சயம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.