ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இமானே கெலிஃப் - ஒரு ஆண்.. வெளியாக மருத்துவ அறிக்கை!
பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் மகளிருக்கான 66 கிலோ எடைப்பிரிவில் இமானே கெலிஃப் பங்கேற்றார்.
பாரிஸ் ஒலிம்பிக்
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸில் ஜூலை 26 ஆம் தேதி 33-வது ஒலிம்பிக் போட்டி நடைப்பெற்றது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
அந்த வகையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் மகளிருக்கான 66 கிலோ எடைப்பிரிவில் இத்தாலியின் ஏஞ்சலாவை இமானே கெலிஃப் எதிர்கொண்டார்.அப்போது 46 வினாடிகளில் வாக் அவுட் செய்தார். அப்போது இமானே கெலிஃப் பெண் அல்ல ஆண் என நடுவர்களிடம் ஏஞ்சலா தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாகச் சர்வதேச குத்துச்சண்டை சங்கம் இமானே கெலிஃப்பை சோதனை அடிப்படையில் தகுதி நீக்கம் செய்தது.எனினும் பாரிஸ் ஒலிம்பிக் கமிட்டி சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் பரிந்துரைகளை ஏற்காத காரணத்தால் இமானே கெலிஃப் போட்டியில் பங்கேற்று, தங்கமும் வென்றார்.
இமானே கெலிஃப்
இந்த நிலையில் இமானே கெலிஃப், ஆண் என்பதை உறுதி செய்யும் மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அதில் இமானே கெலிஃபுக்கு ‘5-ஆல்ஃபா ரிடக்டேஸ் குறைபாடு’ உள்ளது. இது ஆண்களிடையே காணப்படும் பாலியல் வளர்ச்சிக் கோளாறு என மருத்துர்வகள் தெரிவித்துள்ளனர்.
அவரது உடலுக்குள் டெஸ்ட்டிக்கல்ஸ் உள்ளது. மேலும், எக்ஸ்ஒய் குரோமோசோம்கள் இருப்பதும் உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.