புதிய பொறுப்பில் நியமிக்கப்பட்ட ராகுல் டிராவிட் - 16 ஆண்டுகால தவிப்பு நிறைவேறுமா?
2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
ராகுல் டிராவிட்
கடந்த 2012ஆம் ஆண்டு மற்றும் 2013ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ராகுல் டிராவிட் இருந்தார் . இதனைத் தொடர்ந்து 2014 மற்றும் 2015ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குநர் மற்றும் ஆலோசகராகப் பணியாற்றினார்.
அதன் பிறகு 2016ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு மாறிய ராகுல் டிராவிட் 2021ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ராகுல் டிராவிட் அண்மையில் ஓய்வுபெற்றார்.
ஐபிஎல்
இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குநர் குமார் சங்கரா தெரிவித்துள்ளதாவது : அவரது நியமனத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குச் சிறந்த பலன் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக 2008ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்ட போது முதல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பை வென்றது. அதன்பின் 16 ஆண்டுகளாக ராஜஸ்தான் அணி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.