பிசிசிஐ கொடுத்த கோடிகளை நிராகரித்த ராகுல் டிராவிட் - என்ன காரணம் தெரியுமா?
T20 உலக கோப்பை வென்றதற்காக பிசிசிஐ கொடுத்த ஊக்க தொகையை ராகுல் டிராவிட் மறுத்துள்ளார்.
T20 உலக கோப்பை
2024 T20 உலக கோப்பையை, இந்திய கிரிக்கெட் அணி வென்றதை நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாடினர். 11 வருடங்களுக்கு பிறகு கோப்பை வென்ற மகிழ்ச்சியில், இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ125 கோடி பரிசு தொகை அறிவித்தது பிசிசிஐ.
இதன் மூலம் ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா ரூ. 5 கோடியும், ரிசர்வ் வீரர்களாக இருந்தவர்களுக்கு ரூ. 1 கோடியும், பயிற்சியாளர்களுக்கு ரூ. 2.5 கோடியும், தேர்வுக் குழுவில் உள்ள 5 உறுப்பினர்களும் தலா ரூ. 1 கோடியும் கிடைக்கும்.
மேலும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு ரூ. 5 கோடியும், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே போ மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் டி திலீப் ஆகியோருக்கு தலா ரூ. 2.5 கோடி கிடைக்கும்.
ராகுல் டிராவிட்
இந்நிலையில், மற்ற துணை பயிற்சியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஊக்க தொகையை எனக்கு வழங்கினால் போதும். கூடுதலாக உள்ள ரூ. 2.5 கோடி எனக்கு வேண்டாம் என ராகுல் டிராவிட் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2018 ம் ஆண்டு U-19 அணி கோப்பையை வென்ற போது ராகுல் டிராவிட் அந்த அணியின் பயிற்சியாளராக இருந்தார். அப்போது, டிராவிட்டிற்கு ரூ. 50 லட்சமும், துணைப் பயிற்சியாளர்களுக்கு ரூ. 20 லட்சமும், வீரர்களுக்கு ரூ. 30 லட்சமும் வழங்கப்பட்டது. அப்போதும் இதே போல் தனக்கு கூடுதலாக வழங்கப்பட்ட ஊக்க தொகையை வாங்க மறுத்தார்.