ஒரே ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்; பல சாதனைகளை படைத்த விராட்கோலி - என்ன தெரியுமா?

Virat Kohli Instagram
By Karthikraja Jul 08, 2024 08:00 AM GMT
Report

ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் விராட்கோலி பல சாதனைகளை படைத்துள்ளார்.

விராட் கோலி

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 27 கோடி பேர் பின்தொடர்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி T20 உலக கோப்பையை வென்றது. இதன் பின் விராட் கோலி ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

virat kohli

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் உலக கோப்பையுடன் போஸ் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணியால் சிக்கலில் சிக்கிய விமான நிறுவனம்

இந்திய கிரிக்கெட் அணியால் சிக்கலில் சிக்கிய விமான நிறுவனம்

இன்ஸ்டாகிராம்

பிரபல பாலிவுட் தம்பதிகளான கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ராவின் திருமண அறிவிப்பு பற்றிய இன்ஸ்டாகிராம் பதிவு தான் 1.6 கோடி லைக்ஸ் உடன் இந்தியாவில் அதிக லைக்ஸ் பெற்ற பதிவாக இருந்தது. தற்போது விராட் கோலியின் பதிவு 2 கோடி லைக்ஸ் பெற்றதன் மூலம் இந்தியாவில் அதிக லைக்ஸ் பெற்ற சாதனையை படைத்துள்ளது. 

மேலும் BTS ஐ சேர்ந்த V என்பவர் தனது செல்ல பிராணி புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். இதுவே ஆசியாவில் முதல் 2 கோடி லைக்ஸ் பெற்ற பதிவாக இருந்தது. தற்போது ஆசியாவில் 2 கோடி லைக்ஸ் பெற்ற 2 ம் நபர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி.

மேலும் 2 கோடி லைக்ஸ் பெற்ற முதல் ஆசிய விளையாட்டு வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். உலகளவில் 2 கோடி லைக்ஸ் பெற்ற விளையாட்டு வீரர் வரிசையில் 5 வது இடத்தில் விராட் கோலி இணைத்துள்ளார்.