Wednesday, Apr 16, 2025

இந்திய கிரிக்கெட் அணியால் சிக்கலில் சிக்கிய விமான நிறுவனம்

Indian Cricket Team Team India Air India
By Karthikraja 9 months ago
Report

இந்திய கிரிக்கெட் அணியை அழைத்து வந்த விமான நிறுவனத்திடம் அதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி

T20 உலக கோப்பை கிரிக்கெட் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியா தீவுகளில் நடைபெற்றது. இதில் இறுதி போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலக கோப்பையை வென்றது. கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு 125 கோடி பரிசு அறிவித்துள்ளது பிசிசிஐ.  

indian cricket team with modi

இந்நிலையில், பார்படாசில் இருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்ட இந்திய அணி வீரர்கள், இன்று அதிகாலை டெல்லி விமான நிலையம் வந்தனர். உலகக் கோப்பையுடன் நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின்பு இந்தியா பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க சென்றுள்ளனர். 

T20 உலக கோப்பை வெற்றிக்கு பிறகு கவலையடைந்த விராட் கோலி மகள் - அனுஷ்கா ஷர்மா நெகிழ்ச்சி பதிவு

T20 உலக கோப்பை வெற்றிக்கு பிறகு கவலையடைந்த விராட் கோலி மகள் - அனுஷ்கா ஷர்மா நெகிழ்ச்சி பதிவு

ஏர் இந்தியா

இதற்கிடையே, வெஸ்ட் இண்டீசில் ஏற்பட்ட புயல் மழையால், இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள நெவார்க்கில் இருந்து புதுடெல்லிக்கு இயக்க திட்டமிடப்பட்ட ஏர் இந்தியா விமானம் ரத்துசெய்யப்பட்டது. அந்த பயணிகள் விமானம் இந்திய அணி வீரர்களை அழைத்துச் செல்ல பார்படாசுக்கு அனுப்பப்பட்டது.

indian crricket team in flight

இந்நிலையில் அந்த விமானத்தில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் இந்த செயல் கடும் சிரமத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மாற்று விமானம் எதுவும் வழங்கப்படவில்லை என பயணிகள் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டினர். தற்போது, இந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்திடம் இருந்து விரிவான அறிக்கையை டிஜிசிஏ கேட்டுள்ளது என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.