இந்தியா கூட்டணி வெற்றி பெரும்! அமைச்சரவையில் மதிமுக இடம் பெறாது - துரை வைகோ

Marumalarchi Dravida Munnetra Kazhagam Tamil nadu trichy Lok Sabha Election 2024
By Karthikraja Jun 02, 2024 01:13 PM GMT
Report

 இந்தியா கூட்டணியின் அமைச்சரவையில் மதிமுக இடம் பெறாது என துரை வைகோ பேசியுள்ளார். 

துரை வைகோ

மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ திமுக கூட்டணி சார்பில் திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதில் அவர் கூறியதாவது, "தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு மூலம் தெரிய வந்துள்ளது.

durai vaiko press meet

தேர்தல் பிரசாரத்தின் போது சென்ற இடங்களில் எல்லாம் மக்களின் ஆதரவு அமோகமாக இருந்தது. ஆகையால் 100 சதவிகிதம் தமிழகத்தில் வெற்றி பெறுவோம். பா.ஜ.க மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்புக்கு இன்னும் 48 மணி நேரம் காத்திருந்த பிறகு தான் சொல்ல முடியும்.இந்தியா கூட்டணி 350 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும். மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என்று கூறும் கருத்துக்கணிப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாது.

திமுக - மதிமுக இடையே மனக்கசப்பா..? துரை வைகோ விளக்கம்!

திமுக - மதிமுக இடையே மனக்கசப்பா..? துரை வைகோ விளக்கம்!

அண்ணாமலை

தேர்தல் முடிவுகளுக்கு பின்பு இந்தியா கூட்டணி காணாமல் போய்விடும் என அண்ணாமலை பேசியது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த துரை வைகோ, "அண்ணாமலை அரசியலுக்கு வந்தது முதல் தவறான கருத்துக்களை, வதந்திகளை மட்டுமே சொல்லி வருகிறார். இந்தியா கூட்டணி காணாமல் போய்விடும் என்று கூறியது அவரது சொந்த கருத்து. அதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

durai vaiko

ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியையும் காணாமல் போய்விடும் என்று யாரும் சொல்ல முடியாது. அது மக்கள் தான் முடிவு செய்ய வேண்டிய விஷயம். அண்ணாமலை பேசியது சர்வாதிகாரத்தனமான பேச்சு. தேர்தல் முடிவுகளுக்கு பின்பு இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை வந்தால், மத்திய அமைச்சரவையில் ம.தி.மு.க கண்டிப்பாக இடம்பெறாது" என்று கூறினார்.