திருச்சியில் துரை வைகோ; காங்கிரஸுக்கு 10 தொகுதி - திமுக போட்ட ஸ்கெட்ச்!
மதிமுகவுக்கு 1 தொகுதியும், காங்கிரஸ்க்கு 10 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தொகுதி ஒதுக்கீடு
திமுக கூட்டணியில் மதிமுக திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது. அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதனைத் தொடர்ந்து துரை வைகோ, திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட மதிமுக ஆட்சி மன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. மதிமுக சார்பில் கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ போட்டியிடுவார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் அறிவித்துள்ளார்.
10 தொகுதி பட்டியல்
மேலும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- திருவள்ளூர் (தனி)
- கடலூர்
- மயிலாடுதுறை
- சிவகங்கை
- திருநெல்வேலி
- கிருஷ்ணகிரி
- கரூர்
- விருதுநகர்
- கன்னியாகுமரி
-
புதுச்சேரி