Tuesday, Apr 29, 2025

திமுகவுடனான சுமுக முடிவு எட்டப்படவில்லை - மதிமுக நிர்வாகக்குழு அவசரக்கூட்டம்!

Vaiko DMK Chennai
By Swetha a year ago
Report

மதிமுக நிர்வாகக்குழு திமுகவுடன்  தொகுதி பங்கீடு குறித்து அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது.

சுமுக முடிவு

நடப்பாண்டின் மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டின் அரசியல் சூழல் பபரபரப்பாக உள்ளது. அனைத்து கட்சிகளும் கூட்டணி பங்கீடு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

vaiko

இந்நிலையில், திமுக உடனான கூட்டணியில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்டோர் இணைந்துள்ளனர்.

இதில், கட்சி கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக,விடுதலை சிறுத்தை ஆகிய இரு கட்சிகளுக்கும் திமுக தொகுதி ஒதுக்கவில்லை.

என்கிட்ட ஹிந்தியா? கேள்விகேட்ட பத்திரிக்கையாளர் - வைகோ என்ன சொன்னார் தெரியுமா?

என்கிட்ட ஹிந்தியா? கேள்விகேட்ட பத்திரிக்கையாளர் - வைகோ என்ன சொன்னார் தெரியுமா?

அவசரக்கூட்டம்

இது தொடர்பான பேச்சுவார்த்தை நீடித்து வருகின்ற நிலையில், திமுகவுடன் மதிமுக 3 முறை ஆலோசனை மேற்கொண்டும் தொகுதி பங்கீடு குறித்து சுமுக முடிவு எட்டப்படவில்லை.

திமுகவுடனான சுமுக முடிவு எட்டப்படவில்லை - மதிமுக நிர்வாகக்குழு அவசரக்கூட்டம்! | Mdmk Leader Meet Today To Discuss Seat Sharing

மேலும், சென்னையில் உள்ள மதிமுக தலைமையகத்தில் இன்று காலை அவசரக்கூட்டம் நடைபெற்று வருகிறது.  மதிமுக நிர்வாகக்குழு நடத்தும் இந்த கூட்டத்தில் திமுகவுடனான தொகுதி பங்கீடு தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.