என்கிட்ட ஹிந்தியா? கேள்விகேட்ட பத்திரிக்கையாளர் - வைகோ என்ன சொன்னார் தெரியுமா?
ஹிந்தியில் கேட்ட கேள்விக்கு வைகோ கூறிய பதில் தொடர்பான வீடியோ பகிரப்பட்டு வருகிறது.
ஆலோசனை கூட்டம்
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் உள்பட 26 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன. இதன் 3வது ஆலோசனை கூட்டம் மும்பையில் 2 நாட்களாக நடந்தது.
இதில், 28 கட்சிகளின் 63 தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்துக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா, உத்தவ் தாக்கரே உள்ளிட்டவர்கள் தலைமை வகித்தனர். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே,
வைகோ பதில்
சோனியா காந்தி, ராகுல் காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழக முதல்வர் முக ஸ்டாலின், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்,
விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற வைகோவிடம் பத்திரிகையாளர் ஒருவர் ஹிந்தியில் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அவர், ‛ஐ டோண்ட் நோ ஹிந்தி'' என பதிலளித்தார்.
அதனையடுத்து, மீட்டிங் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. ஒவ்வொருவரும் தங்களின் ஆலோசனை கூறினர். மீட்டிங்கில் ஒருங்கிணைந்த கருத்து ஏற்பட்டுள்ளது. ஒருமனதாக செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது என ஆங்கிலத்தில் பதிலளித்தார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.