மதிமு கழக செயலாளராக துரை வையாபுரி நியமனம் - வைகோ அறிவிப்பு
இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மகனுக்கு கட்சியில் பதவி வழங்குவது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது , இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன், துரை வைகோ கட்சியின் தலைமை கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் கணேசமூர்த்தி, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் வைகோவின் மகனுக்கு கட்சியில் பதவி வழங்குவது குறித்த வாக்கெடுப்பு மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அதன்படி,106 நிர்வாகிகள் கலந்து கொண்ட ரகசிய வாக்கெடுப்பில் 104 பேர் துரை வைக்கோவுக்கு ஆதரவு கொடுத்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன், துரை வைகோ கட்சியின் தலைமை கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த வைகோ:
திமுக உடனான கூட்டணி தொடரும்; மதிமுகவில் வாரிசு அரசியல் இல்லை என கூறிய வைகோ துரை வைகோவின் அரசியல் நுழைவை 2 ஆண்டுகளாக தடுத்துவந்தேன்; ஆனால் இப்போது முடியவில்லை என கூறினார்.
மேலும், தனக்கு தெரியாமலேயே 2 ஆண்டுகளாக துரை வைகோ அரசியல் ஈடுபட்டு வந்ததாகவும் கூறினார்.
அதே சமயம், மரணம் வரை எனக்கு அரசியலில் இருந்து ஓய்வில்லை; எனக்கு வயது ஆகிவிடவில்லை; நான் இளமையாகவே இருக்கிறேன் இப்போதும் வாலிபால் விளையாடுவேன். வருகிறீர்களா? என வைகோ கேள்வி எழுப்பினார்.