சீட் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை; திமுகவுடன் தான் கூட்டணி - துரை வைகோ பகிரங்க தகவல்!

M K Stalin Vaiko DMK trichy
By Sumathi Feb 17, 2024 05:09 AM GMT
Report

திமுக கூட்டணியில் இருந்து வெளியில் வர மாட்டோம் என துரை வைகோ தெரிவித்துள்ளார்.

 துரை வைகோ

திமுக கூட்டணியில் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுகவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டது. ரோடு தொகுதியில் மதிமுகவின் கணேசமூர்த்தி திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

durai vaiko - stalin

மேலும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு ராஜ்யசபா எம்.பி பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக உடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அதில், இன்னும் தொகுதி உடன்பாடு இறுதியடைவில்லை.

இந்த லோக்சபா தேர்தலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிடுவதில் மதிமுக உறுதியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து, சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து, தங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

மதிமுக கட்சி உருவான கதை - யார் இந்த  வைகோ?

மதிமுக கட்சி உருவான கதை - யார் இந்த வைகோ?

திமுக கூட்டணி

இந்நிலையில், துரை வைகோ அளித்த பேட்டியில், தேர்தல் பத்திரம் வழக்கில் உச்ச நீதிமன்றம் பாஜக அரசுக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளது. திமுக கூட்டணியில் ஒருமித்த கருத்துடன் அனைத்து கட்சிகளும் இருக்கிறோம். 2024 ல் மீண்டும் மோடி வந்து விடக்கூடாது, மதவாத சக்திகளுக்கு வாய்ப்பு கொடுத்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

vaiko with stalin

அதிமுக, பாஜக-வை எதிர்ப்பதை வரவேற்கின்றோம். ஆனால், நாங்கள் அதிமுக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பில்லை. கடந்த முறை ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை சீட் பெற்றிருந்தோம், இந்த முறை கூடுதலாக ஒரு மக்களவை தொகுதி வேண்டும் என திமுக தலைமையிடம் கேட்டுள்ளோம். திமுக கூட்டணியில் இருந்து ஒருபோதும் வெளியில் வர மாட்டோம்.

கேட்ட சீட் கொடுக்காவிட்டாலும் கூட்டணியில் இருந்து வெளியில் வர மாட்டோம். நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் உரிய பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் கொடுக்கும் சீட்களின் அடிப்படையில் போட்டியிடுவோம். கண்டிப்பாக எங்களின் பம்பரம் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது தான் எங்களது எண்ணம். தலமைச்சரும் இதனை ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், துரை வைகோவுக்காக, திருச்சி தொகுதியை மதிமுக கோரி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.