மதிமுக கட்சி உருவான கதை - யார் இந்த வைகோ?
மதிமுக கட்சி உருவான கதையை தற்போது சற்று விரிவாக பார்க்கலாம்.
உருவாக்கம்
1993 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து வைகோ உள்ளிட்ட சிலர் வெளியேற்றப்பட்டதை அடுத்து அனைவரும் ஒருங்கிணைந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கினர்.
மே6 ஆம் தேதி 1995 ஆம் ஆண்டு கட்சியின் பொதுக்குழு கூடி கட்சியின் புதிய கொடி மற்றும் கொள்கைகளை உருவாக்கியது.
கட்சியின் நிறுவன பொதுச்செயலாளர் ஆன வைக்கோ யார் என்பதை அவரின் பின்னணி என்ன என்தை பார்க்கலாம்.
வைகோ பிறப்பு
மாவட்ட பிரிப்பிற்கு முன்னாள் திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டியில் 1944 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பிறந்தவர் வை.கோபால்சாமி என்ற வைகோ. இவருக்கு மூன்று சகோதரிகள், ரவிச்சந்திரன் என்ற இளைய சகோதரும் உள்ளனர்.
திருமணம்
வைகோ ரேணுகா தேவி என்ற பெண்ணை 14 ஆம் தேதி ஜூன் மாதம் 1971 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு துரை வையாபுரி என்ற மகனும் ராஜலெட்சுமி மற்றும் கண்ணகி என்ற மகள்களும் உள்ளனர்.
அரசியல் வாழ்க்கை
1964 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா முன்னிலையில் சென்னை கோகலே மன்றத்தில் இந்தி எதிர்ப்புக் கருத்தரங்கத்தில் முதன் முதலில் பேசி தனது அரசியல் வாழ்வில் முதல் அடி எடுத்து வைத்தார் வைகோ.
திமுகவில் முக்கிய உறுப்பினராக இருந்த இவர் மீது 1992 ஆம் ஆண்டு கருணாநிதியை கொலை செய்ய முயற்சித்ததாக கொலை பழி சுமத்தப்பட்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
அதன் பின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இவர் மூன்று முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் ,இரண்டு முறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தொடர்ச்சியாக ஆதரவளித்து வருபவர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காக 2001 இல் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையிலிருந்தார்.
கையாண்ட முக்கிய போராட்டம்
தமிழகத்தின் முக்கியமான பிரச்சனைகளான முல்லைப் பெரியாறு பிரச்சனை, ஈழத்தமிழ் பிரச்சனை,மீனவர்கள் பிரச்சனை, ஸ்டெர்லைட் என பல போராட்டங்களை நடத்தி வந்துள்ளார் வைகோ.
பிரதான போராட்டங்களில் ஒன்று முல்லைப் பெரியாறு பிரச்சனைகளில் 8 ஆண்டுகளாக போராடினார். தனித்தமிழ் ஈழம் அமைப்பதற்காக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற ஒற்றை மனிதனையாய் முதலில் உலக அரங்கில் குரல் கொடுத்தவர் வைகோ.
வைகோ வகித்த பதவிகள்
1978 ஆம் ஆண்டு முதன் முதலாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1984 ஆம் ஆண்டு 2-வது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1990-ல் மீண்டும் மூன்றாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானார்.
1994 - ஆம் ஆண்டு மதிமுகவின் நிறுவன பொதுச் செயலாளரானார்.
1999- ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினர்
2019 ஆம் ஆண்டு நான்காவது முறையாக மாநிலங்களவை உறுப்பினர்.
இவர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
மதிமுகவின் முக்கிய தலைவர்கள்
திருப்பூர் சு.துரைசாமி - அவைத்தலைவர்
அ.கணேசமூர்த்தி - பொருளாளர்
துரை வைகோ - தலைமை நிலைய செயலாளர்
மல்லை சத்யா - துணை பொதுச்செயலாளர்
மேற்கண்ட தலைவர்கள் மதிமுகவின் முக்கிய தலைவர்களாக இருந்து வருகின்றனர்.