30 ஆண்டுகளாக கெட்டுப்போகாத McDonald’s பர்கர் - எலி கூட பக்கத்துல போகலையாம்.. எப்படி?
சுமார் 30 ஆண்டுகள் பழைய பர்கர் கண்டறியப்பட்டுள்ளது.
McDonald’s பர்கர்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கேசி டீன் மற்றும் எட்வார்ட்ஸ் நிட்ஸ் ஆகியோர் கடந்த 1995ஆம் ஆண்டில் அடிலெய்டில் உள்ள மெக்டொனால்ட் உணவகத்தில் சீஸ் உடன் கூடிய குவார்ட்டர் பவுண்டர் பர்கரை வாங்கியுள்ளனர்.
அந்த பர்கர் 30 ஆண்டுகளாகக் கெட்டுப்போகாமல் இருக்கிறதாம். இது குறித்து அந்த இளைஞர்கள் கூறுகையில், "அப்போது நாங்கள் இளைஞர்கள். நாங்கள் நிறைய உணவுகளை ஆர்டர் செய்துவிட்டோம்.
30 ஆண்டுகால ஆச்சர்யம்
இருப்பினும், அது அளவுக்கு அதிகமாகப் போய்விட்டது. இதனால் அந்த பர்கரை என்ன செய்யலாம் என ஆலோசித்தோம். அப்படி நாங்கள் பேசும் போது இதை அப்படியே வைத்திருந்தால் என்ன நடக்கும் என்று யோசித்தோம். அதைத் தான் செய்தோம்" எனத் தெரிவித்துள்ளனர்.
அந்த பர்கரை அவர்கள் "McFossil" என்று அழைக்கிறார்கள். நுண்ணுயிர் வளர்ச்சியின் அறிகுறிகள் கூட அதில் தென்படவில்லை. கெட்டுப்போன வகையில் வாசம் கூட அதில் இருந்து வரவில்லை. ஆனால், அளவு மட்டும் குறைந்துள்ளது.
சாதாரண கப் போர்ட்டில் கண்டெய்னர் ஒன்றில் தான் வைத்துள்ளனர்.
லி அங்கிருந்த மற்ற பொருட்களை எல்லாம் சாப்பிட்டு இருக்கிறது. ஆனால் பர்கரை சாப்பிடவில்லை. இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.