சூடான சிக்கன்; வெந்த சிறுமியின் கால் - மெக்டொனால்டுக்கு 6 கோடி இழப்பீடு!
மெக்டொனால்டு உணவகத்திற்கு 8 லட்சம் டாலர் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மெக்டொனால்டு
அமெரிக்கா, புளோரிடாவில் மெக்டொனால்டு உணவகம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு அண்மையில் பிலானா-ஹம்பர்டோ தம்பதியர் சிக்கன் நக்கெட்ஸ் பார்சல் வாங்கி உள்ளனர். அதனை பெற்றுக்கொண்டு காருக்கு சென்று இருக்கையில் வைத்துள்ளனர்.
அதில் ஒரு சிக்கன் நக்கெட்ஸ் துண்டு இருக்கையில் சிக்கியுள்ளது. அதன்மீது அவர்களின் குழந்தையின் கால் பட்டதால் கால் வெந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, சூடான சிக்கன் நக்கெட்டை சரியாக பார்சல் செய்து வழங்காத மெக்டொனால்டு நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
6 கோடி இழப்பீடு
விசாரணையில், அஜாக்கிரதையாக செயல்பட்டதால் 1.5 கோடி டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதில் எந்த தவறும் செய்யவில்லை என நிறுவனம் வாதிட்டது.
முடிவில், பாக்கெட்டில் சரியான எச்சரிக்கை வாசகத்தை அச்சிடாததும், பாதுகாப்பற்ற முறையில் உணவை கொடுத்ததும் குழந்தையின் காயத்திற்கு காரணம் என தெரியவந்தது. அதனையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 8 லட்சம் டாலர் (ரூ.6 கோடி) இழப்பீடாக வழங்க மெக்டொனால்டு நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது.