அலுவலகம் அனைத்தையும் மூடிய மெக்டொனால்டு - பதற்றத்தில் ஊழியர்கள்!
அனைத்து நிறுவனங்களையும் மெக்டொனால்டு நிறுவனம் தற்காலிகமாக மூடியுள்ளது.
மெக்டொனால்டு
அமெரிக்காவின் மெக்டொனல்டு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிறுவனத்தின் தரப்பில், கடந்த வாரம் ஒரு மெயில் வந்துள்ளது. அதில், ஊழியர்கள் திங்கள் முதல் புதன் கிழமை வரை வீட்டிலிருந்து பணிபுரியும்படி அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர்.
இந்த வாரம் திட்டமிடப்பட்ட அனைத்து மீட்டிங்களையும் ரத்து செய்யுமாறும் ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் பணிநீக்கங்கள் பற்றிய செய்திகளை வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக மூடல்
கடந்த ஜனவரி மாதம் ஊழியர்களின் அளவை மதிப்பாய்வு செய்வதாக நிறுவனம் அறிவித்து இருந்தது. இது சில பகுதிகளில் ஊழியர்களின் விரிவாக்கத்துக்கும், சில பகுதிகளில் பணிநீக்கத்துக்கும் வழிவகுக்கும் என நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நிறுவனங்களை மூடியதோடு மட்டுமில்லாமல் ஊழியர்களின் பணிநீக்க நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பையும் தயார் செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.