இனி உணவுகளில் தக்காளியை சேர்க்கமாட்டோம் - மெக்டொனால்ட்ஸ் அதிரடி!
தக்காளி விலை உயர்வு காரணமாக இனி நாங்கள் தக்காளியை பயன்படுத்த போவதில்லை என்று மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது
தக்காளி விலை உயர்வு
கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் தக்காளி 100 முதல் 150 வரை விற்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் காய்கறி விலையையும் அதிகரித்துள்ளது. தொடர்மழை காரணமாக தக்காளி சாகுபடி குறைந்ததால் வெளி மாநிலங்களிலிருந்து வரத்து குறைந்துள்ளது.
இதன் காரணமாக இன்று சென்னை கோயம்பேட்டில் சில்லறை விற்பனையில் ௧௨௦ ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் தக்காளி 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
தக்காளியை சேர்க்கப்போவதில்லை
இந்நிலையில் விலை உயர்வு காரணமாக தாங்கள் இனி தயாரிக்கும் உணவுகளில் தக்காளியை சேர்க்கப்போவதில்லை என்றும் தக்காளி சம்மந்தப்பட்ட உணவுகளின் ஆர்ட்டர்களை எடுக்கப்போவதில்லை என்றும் மெக்டொனால்ட்ஸ் டெல்லி கிளை அறிவித்துள்ளது.
இது குறிப்பிட்ட சில காலங்களுக்கு மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அசெளகரியத்துக்கு வருந்துவதாகவும் தெரிவித்துள்ளது.