அவருடன் விளையாடுவது நரகம் - வீரர்களுக்கு அலெர்ட் கொடுத்த நெய்மர்
கிலியன் எம்பாப்பே உடன் விளையாடுவது நரகம் என நெய்மர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெய்மர்
கடந்த 2017 முதல் 2023 வரையில் பிரான்ஸின் பிஎஸ்ஜி கிளப் அணிக்காக எம்பாப்பே மற்றும் நெய்மர் இருவரும் இணைந்து விளையாடினர். 136 போட்டிகளில் ஒன்றாக களம் கண்டுள்ளனர்.
தொடர்ந்து தற்போது நெய்மர் அல்-ஹிலால் அணியிலும், எம்பாப்பே ரியல் மாட்ரிட் அணியிலும் வருகின்றனர். இந்நிலையில், பிரேசில் வீரர்கள் வினிசியஸ் ஜூனியர், ரோட்ரிகோ மற்றும் மிலிடாவோ ஆகியோருக்கு நெய்மர் அலெர்ட் கொடுத்துள்ளார்.
பனிப்போர்
இதனை பத்திரிகையாளர் சிரில் ஹனோனா பகிர்ந்துள்ளார். ரியல் மாட்ரிட் அணியில் உள்ள பிரேசில் வீரர்கள் அனைவரும் நெய்மரின் நண்பர்கள்.
களத்தில் எம்பாப்பேவும் நெய்மரும் இணைந்து செயல்பட்டிருந்தாலும் அவர்களுக்குள் பனிப்போர் இருந்தது. எம்பாப்பே உடன் விளையாடுவது நரகம் என ரியல் மாட்ரிட் அணியில் உள்ள பிரேசில் வீரர்களிடம் நெய்மர் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.