அவரு ரொம்ப நல்லவரு.. அதனால் விவாகரத்து - பிரபல கால்பந்து வீரரின் முன்னாள் மனைவி!
கால்பந்து வீரர்
பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரராக இருந்தவர் ரிக்கார்டோ இசேக்சன் டோஸ் சாண்டோஸ் லெய்டே. இவர் காகா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு கால்பந்திலிருந்து ஓய்வுபெற்றார்.
காகா கடந்த 2005-ம் ஆண்டு தனது காதலியான கரோலின் சிலிகோவை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை 2015-ம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து பிரேசில் மாடல் அழகியான கரோலினா டையாஸை காகா திருமணம் செய்து கொண்டார்.
விவாகரத்து
இந்நிலையில் விவாகரத்திற்கான காரணம் குறித்து காகாவின் முதல் மனைவி கரோலின் சிலிகோ பேசியுள்ளார். அவர் கூறியதாவது "காகா ஒருபோதும் எனக்கு துரோகம் செய்யவில்லை. அவர் என்னை அன்பாக கவனித்துக்கொண்டதோடு சிறந்ததொரு குடும்பத்தையும் எனக்கு பரிசாக அளித்தார்.
ஆனால், எனக்கு அது எதிலும் மகிழ்ச்சியில்லை. எப்போதும் ஏதோ ஒன்று குறையாகவே இருந்தது. காரணம் என்னவென்றால் காகா எப்போதும் மிக சரியானவராக இருந்தார். அதனால் நான் அவரை விவாகரத்து செய்தேன்" என்று தெரிவித்துள்ளார்.