வெளிநாட்டு பெண்ணுடன் சுற்றிய ஜெய்ஸ்வால் - கடுப்பில் கம்பீர்!
ஜெய்ஸ்வால் பயிற்சி முகாமில் தடுமாறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெய்ஸ்வால்
இந்திய அணி வீரர்கள் தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். விளையாடப்போகும் 10 டெஸ்ட் போட்டிகளில் முதல் டெஸ்ட் வங்கதேசத்துக்கு எதிரானது.
இதற்கிடையில், இந்திய அணியின் தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த இங்கிலாந்து தொடரில் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் இரட்டை சதம் அடித்து 200 ரன்களுக்கு மேல் குவித்தார்.
பயிற்சியில் சொதப்பல்
இந்நிலையில், ஜெய்ஸ்வால் தற்போது பயிற்சி முகாமில் தடுமாறி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. முன்னதாக, ஜெய்ஸ்வால் தனது ஓய்வு நேரத்தில் கிரிக்கெட் குறித்து எந்த பயிற்சியும் செய்யாமல் ஹாமில்டன் என்ற இங்கிலாந்து பெண்ணுடன் சுற்றிக்கொண்டிருந்தார்.
இதுகுறித்து ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக பும்ராவை பயிற்சி முகாமில் எதிர்கொண்ட போது அவர் தொடர்ந்து பும்ராவிடம் போல்ட் ஆகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.