இனி பேட்ஸ்மேன்கள் யாரும் ஏமாற்ற முடியாது - கம்பீர் உத்தரவு!
பேட்ஸ்மேன்கள் குறித்த முக்கிய முடிவு ஒன்றை கம்பீர் எடுத்துள்ளார்.
IND vs BAN
இந்திய அணி வரும் 19ஆம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது.
இந்திய வீரர்கள் தற்போது சுழற் பந்துவீச்சுக்கு எதிராக கடுமையாக தடுமாறுகிறார்கள். இதனால் ஷகிபுல் ஹசன் போன்ற அனுபவமிக்க வீரர்களை எதிர்கொள்வது இந்திய அணி வீரர்களுக்கு சுலபமாக இருக்காது.
கம்பீர் முடிவு
எனவே, தற்போது கம்பீர் ஒரு முடிவை எடுத்துள்ளார். பேட்ஸ்மேன்களும் இனி சுழற் பந்துவீச்சை கற்றுக் கொண்டு பந்து வீச வேண்டும்.
இதன் மூலம் ரோகித் சர்மா, விராட் கோலி போல் நாங்கள் வெறும் பேட்டிங் மட்டும்தான் செய்வோம் என்று கூற முடியாது.
அதன்படி, பயிற்சி முகாமில் ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் சுழற் பந்து வீச்சை வீசி பயிற்சி எடுத்து வருகின்றனர்.