இது பாகிஸ்தான் இல்லை; இந்தியாவில் இதை செய்ய முடியாது - டிகே பதிலடி!
இந்தியா குறித்த வங்கதேச கேப்டன் கருத்திற்கு டிகே பதிலடி கொடுத்துள்ளார்.
Ind vs Ban
2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை செப்டம்பர் 19ஆம் தேதி சென்னையில் துவங்குகிறது. முன்னதாக பாகிஸ்தானை 2 – 0 (2) என்ற கணக்கில் வங்கதேசம் தோற்கடித்தது.
தொடர்ந்து, பாகிஸ்தானை போலவே அடுத்ததாக இந்தியாவையும் அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவோம் என்று வங்கதேச கேப்டன் நஜ்முல் சான்டோ கூறியிருந்தார்.
டிகே பதிலடி
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள தினேஷ் கார்த்திக், ’தனிப்பட்ட முறையில் வங்கதேச அணி இந்தியாவுக்கு கடினமான சவாலை கொடுக்கும் என்று நான் நினைக்கவில்லை.
ஏனெனில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகப்பெரிய வேலையாகும். பாகிஸ்தான் மண்ணில் வங்கதேசம் சிறப்பாக விளையாடியிருக்கலாம்.
அதற்காக இந்தியாவை அவர்கள் அதிகம் தொந்தரவு செய்வார்கள் என்று நான் நம்பவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.