உதட்டில் முத்தம் கொடுத்து பெண் முதலையை திருமணம் செய்த மேயர்..!
மெக்சிகோவில் நகரின் மேயர் ஒருவர் முதலை ஒன்றை திருமணம் செய்து கொண்ட வினோத நிகழ்வு நிகழ்ந்துள்ளது.
பெண் முதலையுடன் திருமணம்
மெக்சிகோ நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள சான் பெட்ரோ ஹவுமெலுலா இது அந்நாட்டின் சிறிய நகரம். தனது நகரம் செழிப்பாக இயற்கை வளத்துடன் இருக்க வேண்டும் என்று பழங்கால சடங்குகள் படி பெண் முதலை ஒன்றை திருமணம் செய்தார்.
ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்ட அந்த திருமண நிகழ்வில் பாரம்பரிய இசை முழங்க வெகு விமர்சையாக நடந்தது.
வாயை கட்டி உதட்டில் முத்தம்
பெண் முதலைக்கு கிறிஸ்துவ முறைப்படி வெள்ளை நிற ஆடை அணிவிக்கப்பட்டிருந்தது. முதலை வாய் திறந்தால் ஏதேனும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற காரணங்களுக்காக வாய் கட்டப்பட்டிருந்தது.
திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நிறைவு பெற்றது.இதையடுத்து விக்டர் முதலையின் உதட்டில் முத்தமிட்டார். இத்திருமணம் குறித்து பேசிய மேயர் விக்டர் கூறும் போது,
இயற்கையிடம் மழை, உணவு , மீன் வேண்டிய நாங்கள் இந்த பிரார்த்தனையை செய்கிறோம்.இது எங்கள் நம்பிக்கை என்றார். இந்த சடங்குகள் பல நுாற்றாண்டுகளுக்கு முன்னிருந்து கடைபிடிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
பொது இடத்தில் புகை பிடிப்பவர்களுக்கு ரூ.2,000 அபராதம்!