பொது இடத்தில் புகை பிடிப்பவர்களுக்கு ரூ.2,000 அபராதம்!

Tamil nadu India Smoking
By Sumathi Jul 01, 2022 07:05 PM GMT
Report

திருக்கோவிலூரில் பொது இடத்தில் புகை பிடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய நடைமுறை 

தமிழகத்தில் பொது இடங்களில் புகையிலை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

smoking

அதாவது பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொது இடங்களில் புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

புகைப்பிடித்தல்

புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்று பொது இடங்களில் வாசகங்கள் இடம் பெற்றிருந்தாலும் யாரும் அதை கண்டுகொள்வதில்லை. அதையும் மீறி புகை பிடிப்பவர்களுக்கு உடலுக்கு கேடு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல்

பொது இடத்தில் புகை பிடிப்பவர்களுக்கு ரூ.2,000 அபராதம்! | Rs 2000 Fine For Smoking In Public Places

அவர்களுக்கு அருகில் இருப்பவர்கள் அதை சுவாசிப்பதால் அவர்களுக்கும் உடல் நலக்கேடு ஏற்படுகிறது. மேலும் பொது இடங்களில் புகையிலை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க பொது சுகாதாரத் துறை, காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் உட்பட 20 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அபராதம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் மார்க்கெட் வீதி பொது இடங்களில் இன்று சுகாதார ஆய்வாளர்கள் அமுதா ,சுப்பிரமணி, சங்கரன் ,சண்முகம், தீவிர சோதனையில் ஈடுபட்டனர்

அப்போது பேருந்து நிலையத்தில் புகை புகைப்பிடித்த 20 நபர்களுக்கு 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் அபராதம் விதித்தனர்.

சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து விஷால் போட்டி? வெளியான தகவல்!