காலை உணவு திட்டம் தனியாருக்கு ஒப்பந்தம்; வாபஸ் வாங்கிய அரசு - மேயர் பிரியா அறிவிப்பு!
காலை உணவு திட்டத்தை தனியாருக்கு வழங்கும் ஒப்பந்த அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை உணவு திட்டம்
தமிழ்நாட்டில் 1 முதல் 5ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் 356 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தொடர்ந்து காலை உணவு சமைப்பதற்கான திட்டத்தை அரசு, தனியாரிடம் கொடுக்க டெண்டர் விடப்பட்டது. ஆனால் இந்த டெண்டருக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், காலை உணவு திட்டத்தை தனியாருக்கு வழங்கும் ஒப்பந்த அறிவிப்பை ரத்து செய்து, இந்த காலை உணவு திட்டத்தை மாநகராட்சியே செயல்படுத்தும் என்று மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார்.
ஒப்பந்தம் ரத்து
கடந்த ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் முதல்வர் ஸ்டாலினால் 30,992 அரசு தொடக்க பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது.

மேலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளும் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, 2.23 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..
22வது அரசியலமைப்பு திருத்தம் வேண்டாம் : மகாநாயக்கர்களை வைத்து சுஜீவ பகிரங்கப்படுத்திய அறிக்கை IBC Tamil
ஈரானின் கொலை அச்சுறுத்தல் : உணவு ட்ரக்கில் மறைந்திருந்து சிறிய விமானத்தில் அமெரிக்கா பறந்த ட்ரம்ப் IBC Tamil